Wednesday, November 19, 2008

தடாகமும்... வண்டும்...

தடாகத்தில் உள்ள தாமரை மலரில் தேன் குடிக்க வந்த வண்டு அந்த காட்சியை கண்டு வியப்புற்றது... இந்நாள் வரை வேறு வண்டு அறியாத அந்த தடாகத்தில் இன்று இரண்டு வண்டுகள் தேன் குடித்துக்கொண்டிருந்தன... அது மட்டுமன்றி, அவை மொய்த்துக்கொண்டிருந்த தாமரை மலர் மேலும் வியப்பினை கூட்டியது...

இந்நாள் வரை அதுபோன்ற ஒரு அழகிய மலர் அங்கு மலர்ந்ததில்லை என்று நினைத்தது அந்த வண்டு... மனதில் மகிழ்ச்சி பொங்கிட, தானும் தேனினை அருந்த அந்த மலர் மீது அமர்ந்து தேன் பருக தொடங்கிய நேரத்தில்...

வீல்...!!! என்று ஒரு அலறல்...

வண்டு கடித்து, குழந்தையின் பாதம்போல் சிவந்த தனது கன்னத்தை தடவிக்கொண்டே அந்த பெண் தடாகத்தில் இருந்து வெளியேறினாள்...

Transcript in English...

Thadaagaththil ulla thaamarai malar-il thaen kudikka vandha vaNdu andha kaatchiyai kandu viyapputtradhu... Innaal varai vaeru vandu ariyaadha andha thadaagaththil indru iraNdu vaNdugal thaen kudiththukkondirundhana... adhu mattumandri, avai moiththukkondirundha thaamarai malar maelum viyappinai koottiyathu...

Innaal varai athupOndra oru azhagiya malar angu malarndhadhillai endru ninaiththadhu andha vaNdu... manadhil magizhchchi pongida, thaanum thaen-inai arundha andha malar meedhu amarndhu thaen paruga thOdangiya naeraththil...

veeellll...!!!! endru oru alaral...

vaNdu kadiththu, kuzhandhaiyin paadham-pOl sivandha thanadhu kannaththai thadavikkOndae andha peNN thadaagaththil irundhu veliyaerinaal...

Tuesday, November 18, 2008

முதல் கிறுக்கல்...


வலைப்பக்கத்தில் எனது முதல் கிறுக்கல்... இது குழந்தை எடுத்து வைத்த முதல் அடி போன்றது...

தத்தித் தடுமாறி விழுந்து எழுந்த பின்புதான் நன்கு நடக்க முடியும்... அவ்வாறு தடுமாறி விழுந்தால் தூக்கி விடுங்கள்... இது உங்களது கடமை அல்ல... சக எழுத்தாளனின் தவறுகளை சுட்டி காட்டி திருத்திட கிடைத்த வாய்ப்பு...

நன்றி...

Transcript in english...

Valaippakkaththil enadhu mudhal kirukkal... ithu kuzhandhai eduththu vaiththa mudhal adi pOndradhu...

Thaththith thadumaari vizhundhu ezhundha pinbhudhaan nangu nadakka mudiyum... Avvaaru thadumaari vizhundhaal thookki vidungal... Idhu ungaladhu kadamai alla... Saga ezhuththaalanin thavarugalai sutti kaatti thiruththida kidaiththa vaaippu...

Nandri...